வேண்டுமடி நீ எனக்கு
ஆசைப்பட்டவள் கிடைக்காததால் தன்னை ஆசைப்பட்டவளை திருமணம் செய்துகொள்ள முயற்சிக்கிறான் நாயகன். அதற்கு அவளது பெற்றோர் சம்மதிக்காததால், அவளும் ஒதுங்கிக்கொள்கிறாள். அவர்களுக்கு முன்பு வாழ்ந்து காட்ட முயலும் ஒரு இளைஞனின் போராட்ட கதையை வேண்டுமெடி நீ எனக்கு நாவலில் எழுதினேன், தாலிக்கொரு மரியாதை இருக்கிறது என்றால் தாலியை கட்டியவன் மரியாதைக்குரியவனாக இருக்க வேண்டும். அவன் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தும் போது வெறும் தாலிக்காக மட்டுமே வாழவேண்டிய நிர்பந்தம் ஒரு பெண்ணுக்கு எற்படுகிறது. அப்படி வாழும் ஒரு பெண்ணின் பிரச்சனை, வேதனை, வலி, அவமானம் என வாழ்க்கை தரும் படிப்பினைகளை சொல்கிறது சொந்தம் இல்லாத பந்தம். இந்த இரு நாவல்களும் மாலைமதி நாவல் இதழில் வெளியானது. வெளியீடூ: உதயம் பிரசுரம்
No comments:
Post a Comment